Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. மழை அடித்து வெளுக்கப் போகுது…. தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை….!!!!

குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் தமிழகத்தில் டிசம்பர் 3ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது புயலாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் டிசம்பர் 4 ஆம் தேதி வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கரையை நெருங்கும் என தெரிவித்துள்ளது.

இதையடுத்து திருவள்ளுர் மாவட்டத்தில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னை, காஞ்சிபுரம், தென் மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தின் வட மாவட்ட மக்கள் இன்று இரவு முதல் நாளை காலை வரை கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது என்று தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் எச்சரித்துள்ளார். இன்று இரவு முதல் நாளை காலை வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |