கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த புதிய விதிமுறையை அம்மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பல தளர்வுகளுடன் அத்தியவாசிய தேவைகளுக்காக பொதுமக்கள் வெளியே நடமாட தொடங்கினாலும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது முக கவசம் அணிந்து வெளியே வருவது உள்ளிட்ட கட்டாயமான விதிமுறைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூபாய் 1000 அபராதம் வசூலிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இங்கு இதுவரை 5 லட்சத்து 92 ஆயிரத்து தொள்ளாயிரத்து பதினோரு பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் 8,777 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.