Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. மின் கட்டணம் செலுத்த நினைத்து ரூ.1.68 லட்சம் இழந்த நபர்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

மின் கட்டணம் பில் தொடர்பாக வந்த போலி மெசேஜை கிளிக் செய்ததால் நாக்பூரில் ஒருவர் 1.68 லட்சம் தொகையை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த ராஜேஷ் குமார் அவதியா மாநில சுரங்க துறையில் பணியாற்றி வருகிறார். இவரின் செல்போனுக்கு கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி மின்கட்டணம் குறித்து ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் நீங்கள் மின் கட்டணத்தை செலுத்தாத காரணத்தால் வீட்டில் மின் சப்ளை நிறுத்தம் செய்யப்படுகிறது.

இது குறித்த முறையான விவரங்களை இந்த ஆப்பில் பார்க்கவும் என வந்துள்ளது.அதனைப் பார்த்து பதறிப் போன ராஜேஷ் குமார் உடனே அந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து லிங்கை கிளிக் செய்துள்ளார். அதன் பிறகு சிறிது நேரத்தில் இவரின் இரு வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 1.68 லட்சம் தொகை பறிபோய் உள்ளது.அதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் சைபர் மோசடி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து பல்வேறு நகரங்களில் மின் கட்டணம் தொடர்பான மோசடிகளில் ஹேக்கர்கள் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |