Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…. முகக்கவசம் சரியாக அணியாவிட்டால் ரூ.200 அபராதம்…. அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோணா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக கடைபிடிக்காமல் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்கின்றனர்.

இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில்களில் முக கவசம் அணியாவிட்டால் அல்லது சரியாக அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. மெட்ரோ பயணிகள் பலர் முக கவசத்தை அணியாமல் பயணிப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |