தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் அதன் உறுமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இருந்தபோதிலும் சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
அங்கு வீடு மற்றும் மருத்துவமனைகளில் 62,007 பேர் ஒரளவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,76,147-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநகராட்சி ஆணையர் சந்தீப் சிங் பேடி கூறியிருப்பதாவது, சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது. மேலும் சளி ,காய்ச்சல், தொண்டை வலி உள்ளிட்ட நோய் அறிகுறிகள் ஏதாவது இருந்தால், 1913 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு உதவி நாடலாம் என்று தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் சளி, காய்ச்சல், தொண்டை வலி உள்ளவர்கள் மருத்துவர்கள் பரிந்துரைகன்றி தாங்களாகவே மருந்து கேட்டு வரும் நபர்களின் விவரங்களை மருந்தக ஊழியர்கள் சேகரித்து வைத்து மாநகராட்சிக்கு வழங்கினால், அவர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தொற்று அறிகுறி உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, முடிவுகள் உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.