Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. யாரும் ஏமாந்துராதிங்க…. பிராண்ட் பெயரில் தயார் செய்யப்பட்ட ரேஷன் அரிசி…!!!!!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள ஒரு குடோனில் டன் கணக்கில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் துறை அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இதனை அடுத்து மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் உத்தரவின் பெயரில் துணை ஆணையர் தங்கதுரை தலைமையிலான தனிப்படை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதனையடுத்து அந்தப் பகுதியில் உள்ள குடோனில் காவலர்கள் சோதனை நடத்தியபோது குடோனில் 20க்கும் மேற்பட்டோர் லாரியில் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு இருப்பது தெரிய வந்தது.

அப்போது காவல்துறையினரை  பார்த்த சிலர் தப்பி ஓடிய நிலையில் அரிசி கடத்தலில் ஈடுபட்ட மதுரை கீரைத்துறை பகுதியை சேர்ந்த கொரில்லா முத்து, அருணாசலம்,ராம்கி  உள்ளிட்ட 12 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது பற்றி மேற்கொள்ளப்பட்ட  விசாரணையில் மதுரை மாவட்டத்திலிருந்து ரேஷன் அரிசி மூட்டைகள் டன் கணக்கில் தூத்துக்குடிக்கு கடத்தி செல்லப்பட்டு அங்கு ஒரு சில மில்லில்  இவை பாலிஸ் செய்யப்படுகின்றது. அதன்பின் பெங்களூர் திருவனந்தபுரத்திற்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து பட்டை தீட்டி மீண்டும் தமிழகத்திற்கு கொண்டு வந்து தரமான அரிசி என கூறி அதிக விலைக்கு விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தனிப்படை காவல்துறையினர் அந்த குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து  மதுரை மாநகர தனிப்படை காவல்துறையினர் மேற்கொண்ட குற்றவாளிகளை கைது செய்து மதுரை மண்டல ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையிடம் ஒப்படைத்தனர். மேலும் மதுரை மாநகரில் 21 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கியதாக  12 பேர் ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |