கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் யாரும் ரத்ததானம் செய்யக்கூடாது என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்தியா கண்டறிந்துள்ள கொரோனா தடுப்பு ஊசிகள் உலக நாடுகள் அனைத்திற்கும் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இருந்தாலும் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொள்வதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள்.
இந்நிலையில் பெரும்பாலான நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனால் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொண்டவர்கள் அடுத்த 28 நாட்களுக்கு ரத்ததானம் செய்யக்கூடாது என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். முதல் தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு அடுத்த 28ஆம் நாளில் இரண்டாம் தடுப்பூசி போட வேண்டும். இதன் மூலம் 56 நாட்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் ரத்ததானம் செய்யக்கூடாது என கூறியுள்ளனர்.