Categories
லைப் ஸ்டைல்

மக்களே உஷார்… லேப்டாப் பயன்படுத்துவதால்… மிகப்பெரிய ஆபத்து…!!!

லேப்டாப் மடியில் வைத்துப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்.

தற்போதைய காலகட்டத்தில் ஐடி துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த ஊழியர்கள் அனைவரும் லேப்டாப் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் அவ்வாறு லேப்டாப் பயன்படுத்தும் ஒரு சிலர் மடியில் வைத்து லேப்டாப் பயன்படுத்துவதால் சில பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அது மட்டுமன்றி அதன் மூலம் பல்வேறு நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. அவ்வாறு மடியில் வைத்து லேப்டாப் பயன்படுத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

லேப்டாப்பை மடியில் வைத்து பயன்படுத்துவதால் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சரும புற்றுநோய், குழந்தையின்மை போன்ற பிரச்சினைகள் வர அதிக வாய்ப்புள்ளது. லேப்டாப் பயன்படுத்தும் போது சரியாக உட்கார வில்லை என்றால் கழுத்து வலி மற்றும் முதுகு வலி போன்றவை ஏற்படும். லேப்டாப்பில் இருந்து வரும் வெளிச்சம் கண்களை பாதித்து தூக்கமின்மை ஏற்படும். எனவே முடிந்தவரை லேப்டாப்பை மடியில் வைத்து உபயோகம் செய்யாமல் இருப்பது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

Categories

Tech |