Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. வங்கி கணக்கில் ஒரு பைசா குறைவு…. ஹேக்கர்களிடம் இருந்து தப்பிய நபர்….!!!

உத்திரபிரதேசம் கிரேட்டர் நொய்டா பகுதியில் தரீன் கிராமத்தில் சுனில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது உறவினர் ஒருவருக்கு ரூ.22,000 பணம் அனுப்பி உள்ளார். ஆனால் அவர் ஒரு எண்ணை தவறாக பதிவு செய்ததால் அடையாளம் தெரியாத வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்ப அனுப்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக வங்கியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஆனால் அவருக்கு வேண்டிய உதவிகள் கிடைக்கவில்லை. இதனால் அந்த வங்கியின் அதிகாரப்பூர்வ டுவிட்டரை தனது டுவிட்டரில் டேக் செய்து உதவி கேட்டுள்ளார். இதனை ஹேக்கர்கள் கவனித்து உடனடியாக தங்கள் வேலையில் இறங்கியுள்ளனர். அதன்பிறகு சுனிலை தொடர்பு கொண்டு அவர்கள் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்யும் படி கூறியுள்ளனர்.

அவரும் அதனை போல செய்துள்ளார். இதனை தொடர்ந்து ஹேக்கர்கள் சுனில் வாங்கி விபரங்களை பெற்று முதல் வேலையாக ரூ.2000 பறிமுதல் செய்து உள்ளனர். ஆனால் அது தோல்வியில் முடிவடைந்துள்ளது. இந்த முறை அவர்கள் ரூ.10,000 பரிமாற்றம் செய்து உள்ளனர். இதனையடுத்து சுனிலுக்கு ஒரு எச்சரிக்கை தகவல் வந்துள்ளது. அதில், உங்களது வங்கி கணக்கில் ரூ.9,999.99 மட்டுமே உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் உஷாரான சுனில் நோய்டா போலீசின் சைபர் பிரிவை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். மேலும் சுனிலின் வங்கி கணக்கில் ஒரு பைசா குறைவாக வைத்திருந்த நிலையில் 2 முறை அவர் ஹேக்கர்களிடம் இருந்து தப்பி உள்ளார். அவரது வங்கியில் இருந்த பணமும் தப்பியது.

Categories

Tech |