Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…வாங்கியது ரூ.30,000 கொடுத்தது ரூ.3 லட்சம்…. ஆபத்தை ஏற்படுத்தும் ஆப் லோன்…. பகீர் சம்பவம்….!!!!

விழுப்புரம் வண்டிமேடு பகுதியைச் சேர்ந்த நித்யா என்ற பெண், கடந்த சில மாதங்களுக்கு முன்பு  மொபைல் ஆப் மூலம் ரூ.30000கடன் வாங்கி அதற்கு மூன்று லட்சம் ரூபாய் தவணையை திருப்பி செலுத்தியும், மேலும் பணம் கேட்டு தொந்தரவு செய்த ஆப் நிறுவனம், சம்பந்தப்பட்ட கடன்காரரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அவரது செல்போனில் இருந்த எங்களுக்கு அனுப்பியதோடு மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளது பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த நித்யா, இச்சம்பவம் குறித்து விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து விழுப்புரம் சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |