அதிகாரிகள் மீன் கடடைகளில் அதிரடி சோதனை செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சில மீன் கடைகளில் கெட்டுப்போன மீன்களை மக்களுக்கு விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மீன்வள உதவி இயக்குனர் ராஜேந்திரன், மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜாமுத்து, மேற்பார்வையாளர் முத்துராஜ், உள்ளிட்ட பலர் சிவகாசியில் உள்ள மீன் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
அந்த சோதனையில் சில கடைகளில் நீண்ட நாட்களாக மீன்கள் கெட்டு போகாமல் இருப்பதற்காக ரசாயன கலவை தடவி வாடிக்கையாளர்களுக்கு மீன்களை விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் 50 கிலோ மதிப்பிலான மீன்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது போன்ற மீன்களை விற்பனை செய்தால் அவதாரம் மற்றும் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.