Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்… வெடித்து சிதறிய செல்போன் பேட்டரி… பரபரப்பு…!!!

சென்னை போரூரில் செல்போன் சர்வீஸ் கடையில் செல்போன் பேட்டரி வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நம் அன்றாட வாழ்க்கையில் தற்போது செல்போன் என்பது மிகவும் இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அனைவரின் வாழ்க்கையும் செல் போன் மூலமாகவே ஓடும் நிலைக்கு மாறியுள்ளது. ஆனால் செல்போன் பயன்படுத்துவதால் சில பாதிப்புகள் ஏற்படுவதை யாரும் உணர்வதில்லை. அதனை தவறாக பயன்படுத்துவதால் சில ஆபத்துக்கள் ஏற்படுகின்றன. அதன்படி இந்தியாவில் நாளொன்றுக்கு 20 செல்போன்கள் வெடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சென்னை போரூரில் செல்போன் சர்வீஸ் செய்யும் கடை ஒன்றில் செல்போன் பேட்டரி வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்போனை சர்வீஸ் செய்வதற்கு முன்பு கடைக்காரர் டிஸ்ப்ளேவை சுத்தம் செய்யும் சனிடைசரால் பேட்டரி துடைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பேட்டரி வெடித்து தீப்பற்றி எரிந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்போன் வெடிப்பதற்கு காரணம் அதன் பேட்டரி தான். மொபைல் போனுடன் கொடுக்கப்பட்டுள்ள பொருத்தமான சார்ஜரை மட்டும் பயன்படுத்தாமல், வேறு சார்ஜரை மாற்றி பயன்படுத்தினால் வோல்ட் சப்ளையில் மாற்றம் ஏற்பட்டு பேட்டரி வெடிக்கும் அபாயம் உள்ளது. மேலும் மொபைலுக்கு ஏற்ற சரியான மெகா பேட்டரியை தான் பயன்படுத்த வேண்டும். அவ்வாறு அதற்கு தகுந்த பேட்டரியை பயன்படுத்தி வந்தால் எந்த ஆபத்துக்களும் ஏற்படாது. அதனால் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Categories

Tech |