இந்தியாவில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வரும் நிலையில் ஜிகா வைரஸ் பாதிப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் கடந்த அக்டோபர் 23ஆம் தேதி இந்திய விமானப்படை அதிகாரி ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதுவே அந்த நகரில் கண்டறியப்பட்ட முதல் வைரஸ் பாதிப்பு.இதையடுத்து இந்திய விமானப்படை அலுவலகத்தை சுற்றி உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் இடம் பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் மாதிரிகள் லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மெடிக்கல் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சோதனையில் அடுத்தடுத்து பலருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. புதிதாக 30 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்புகள் 66 ஆக அதிகரித்துள்ளது. கான்பூர் மட்டுமல்லாமல் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து பேசி அதிகாரி, திடீரென பாதிப்புகள் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம்.வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த சுகாதார துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வீடு வீடாகச் சென்ற மாதிரிகள் சேகரிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
ஜிகா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரப் பிரதேச மாநில முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மிகவும் தீவிரமான ஆய்வு பணிகள் மேற்கொள்ள வேண்டும். சுற்றுப்புறத் தூய்மையை உறுதி செய்ய வேண்டும். கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க வேண்டும். நாட்டிலேயே அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் 90 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.அடுத்தடுத்து மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.