Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்….! ஹோட்டலில் ‘QR’ குறியீட்டை மாற்றி….. பணத்தை அபேஸ் செய்த ஆசாமி….. அதிர்ச்சி சம்பவம்…..!!!!

ஹோட்டலின் டிஜிட்டல் கியூஆர் குறியீட்டை மாற்றி சொந்தக் கணக்கின் கியூஆர் குறியீட்டை மாற்றி வைத்து பணத்தை நூதனமாக திருடி வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொச்சியில் உள்ள ஹோட்டலின் கியூஆர் குறியீட்டை மாற்றி, தனக்கு சொந்தமான கியூஆர் குறியீட்டை பயன்படுத்தி மோசடி செய்த வழக்கில் சந்தேக நபரை தோப்பும்பாடி போலீசார் கைது செய்தனர். முண்டம்வெளி காட்டு நிலத்தில் உள்ள அவரது வீட்டில் மிதுன் (33) என்பவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஜூன் 6ம் தேதி தோப்பும்பாடி போஸ்ட் ஆபீஸ் சந்திப்பு அருகே உள்ள ஹோட்டல் அரபி கானாவின் கியூஆர் குறியீட்டை மாற்றி, அதற்கு பதிலாக தனது சொந்த கணக்கின் க்யூஆர் குறியீட்டை போட்டு மோசடி செய்தார். ஹோட்டல் உரிமையாளரின் குற்றச்சாட்டின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பிறகு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

Categories

Tech |