துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசனுர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட அரசனூர், திருமாஞ்சோலை, இலுப்பக்குடி, ஏனாதி, படமாத்தூர், பச்சேரி, வேம்பத்தூர், களத்தூர் ஆகிய பகுதிகளில் வருகின்ற 12-ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் மனோகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாகவும் அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.