இந்தியாவில் மருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் மாத்திரை, மருந்துகளை மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்து வருகின்றன. அதன் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 931 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில் 908 மருந்துகளின் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய பாதிப்பு, ஜீரண கோளாறுகள் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 23 மருந்துகள் தரமற்றவை என கண்டறிய பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரங்களை மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் cdsco.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.