ஆன்லைன் ஷாப்பிங் என்ற பெயரில் தற்போது ஏராளமான மோசடிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தற்போது ஒரு மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நூதன மோசடி என்னும் முறை நமக்கு புதியது கிடையாது. ஆனால் நாளுக்கு நாள் இந்த மோசடி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் அப்பாவி ஏழை எளிய நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டு வருவதுதான் அதிகரிக்கிறது. பணத்தை வாங்கிக்கொண்டு பொருளை மாற்றி கொடுத்து ஏமாற்றி வருகிறது. அண்மைக்காலமாக இதுபோன்ற மோசடி அதிகரித்து வருகின்றது.
அந்த வகையில் சென்னையை சேர்ந்த வினோத் சமீபத்தில் பிளிப்கார்ட்டில் கேனன் 300D கேமராவை ஆர்டர் செய்துள்ளார். ரூ.26,500 மதிப்புள்ள அந்த கேமரா பார்சல் வீட்டிற்கு வந்ததும் அதைத் திறந்து பார்த்தால் அதில் ஒரு பொம்மை கேமராவும், பெயிண்டும் இருந்துள்ளளது. இதனால் அதிர்ந்துபோன வினோத் விவரத்தைத் தொலைபேசியில் அந்நிறுவனத்தை தொடர்புகொண்டும் தகுந்த பதில் கிடைக்கவில்லை. எனவே மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கும்படி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.