தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன் எதிரொலியாக வைகை அணையில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வைகை அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 5,399 கன அடியிலிருந்து 8,900 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு நள்ளிரவில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.