Categories
Uncategorized மாநில செய்திகள்

மக்களே உஷார்!…. “Buy One Get One Free” ஆஃபர்…. ரூ.8.46 லட்சம் அபேஸ்…. அதிர்ச்சி சம்பவம்….!!!

தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை காலத்தன்று ஆஃபர் என்பது பழக்கமாக இருந்து வருகிறது. அதாவது, பண்டிகை காலத்தின் போது ஒன்று ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று அதிக மெசேஜ்கள் வரும். ஆனால் சமீபகாலமாக பிரபல கம்பெனியின் லோகோவை பயன்படுத்தி போலியான இணையதளம் மூலம் ஆஃபர் மெசேஜ் அனுப்பி வங்கி கணக்கை முடக்கம் செய்யும் நூதன கொள்ளை அரங்கேறி வருகிறது. இது குறித்து சமீபத்தில் இந்திய அரசின் இணைய பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பேஸ்புக்கில் பிரபல ஃபுட் ஆர்டர் கம்பெனியின் ஒரிஜினல் லோகவை பயன்படுத்தி போலியான இணையதளம் மூலம் பை ஒன் கெட் ஒன் ஆஃபரை வெளியிட்டுள்ளது.

இதனை பார்த்து 51 வயது பெண்மணி இதனை வாங்க முயன்று அந்த லிங்கை கிளிக் செய்து அதில் கேட்கப்பட்ட விவரங்களுக்கு பதில் அளித்துள்ளார். உடனடியாக இவரின் செல்போன் ஹேக் செய்யப்பட்டு வங்கி கணக்குகை முடக்கி ரூ.8.4 லட்சம் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மீண்டும் மத்திய அரசின் இணைய பாதுகாப்பு அமைச்சகம், இது போன்ற போல போலியான ஆஃபர்களை நம்ப வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபோன்று உங்கள் போனில் லிங்குடன் வரப்படும் மெசேஜ்களை உடனடியாக டெலிட் செய்ய வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |