Categories
மாநில செய்திகள்

மக்களே எச்சரிக்கையா இருங்க…. சென்னைக்கு வெள்ள அபாயம்…. BIG ALERT…!!!

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கத்தில் திறக்கப்படும் நீரின் அளவு 2000 கன அடியாக உயர்ந்துள்ளது. இன்று காலை 1000 கன அடி உபரிநீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும்  3000 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெருமழை பெய்து வருவதால் ஏரிக்கு நீர்வரத்து 4297 கன அடியாக உள்ளது. இதனால்  நீர் திறப்பு மேலும் அதிகரிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடையாறு கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, பாதுகாப்பாக இருக்கும்படி காஞ்சி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயரம் 22.25 அடியாக உள்ளது.

Categories

Tech |