Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மக்களே எச்சரிக்கையா இருங்க… இதை கட்டாயம் கடைபிடிக்கணும்… மீறினால் நடவடிக்கை பாயும்..!!

முககவசம் அணியாமல் சீர்காழி நகர்ப்பகுதியில் வாகனம் ஓட்டிச் சென்ற ஓட்டுனர்களுக்கு நகராட்சி சார்பில் ரூ.200 அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் பெரும்பாலான இடங்களில் கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் பொறியாளர் தமயந்தி, பணி மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன், மேலாளர் காதர்கான் ஆகியோர் சீர்காழி நகராட்சி ஆணையர் தமிழ்செல்வி தலைமையில் சீர்காழி நகர் பகுதியில் முக கவசம் அணியாமல் சென்றவர்களிடம் ரூ. 200 அபராதமாக வசூலித்தனர்.

மேலும் அவர்களை எச்சரித்து அனுப்பினர். சீர்காழி நகர் பகுதிக்கு உட்பட்ட உணவு விடுதி, டீக்கடை, சூப்பர் மார்க்கெட், மளிகை கடை, கறிக்கடை, மீன் கடை ஆகிய கடைகளில் முககவசம் அணிந்து பணியாளர்கள் பணியில் ஈடுபட வேண்டும் என்று நகராட்சி பணியாளர்கள் கேட்டுக்கொண்டனர். அதேபோல் வைத்தீஸ்வரன் கோவில் ஆகிய காவல் நிலையத்திற்கு உட்பட்ட இடங்களில் முக கவசம் அணியாமல் வாகனங்களை ஓட்டிச் சென்றவர்களிடம் காவல்துறையினர் எச்சரித்து முக கவசங்களை இலவசமாக வழங்கினர்.

Categories

Tech |