பெரம்பலூரில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனா தொற்றினால் ஒரே நாளில் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மாவட்டம் முழுவதும் மொத்தம் 2,398 ஆக அதிகரித்துள்ளது.
இதில் ஏற்கனவே 22 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,326 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 50 பேர் கொரோனாவுக்குகு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 683 பேருக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.