Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மக்களே எச்சரிக்கையா இருங்க..! அதிகரித்து வரும் பாதிப்புகள்… ஒரே நாளில் உறுதியானவை..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்தது பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 21-ஆம் தேதி ஒரே நாளில் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,423 ஆக அதிகரித்துள்ளது. அதில் 22 பேர் ஏற்கனவே இறந்துள்ளனர். மேலும் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,340 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 61 பேர் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories

Tech |