Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மக்களே எச்சரிக்கையா இருங்க..! அதிகரித்து வரும் பாதிப்புகள்… ஒரே நாளில் உறுதியானவை..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 15 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 15 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,484 ஆக அதிகரித்துள்ளது. இதில் ஏற்கனவே 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,371 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது கொரோனாவுக்கு 90 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 180 பேருக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று மொத்தம் 57 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Categories

Tech |