சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 148 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மேலும் 148 பேருக்கு சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் வீட்டு தன்மைகளில் 839 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 103 பேர் நேற்று ஒரே நாளில் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.