தலைநகர் டெல்லியில் வெப்பநிலையானது 40 செல்சியஸ் வரை உயரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கடும் வெப்பநிலை நிலவி வருகிறது. இந்நிலையில் அடுத்த 4 நாட்கள் முதல் 5 நாட்களுக்கு மத்திய மற்றும் மேற்கு இந்தியாவின் வெப்பலை, மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தலைநகர் டெல்லியில் வருகிற நாட்களில் வெப்பநிலையானது 40 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் உயரக்கூடும் என்றும் கூறியுள்ளது.
மேலும் இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியுள்ளதாவது, வெப்பநிலையானது 39 டிகிரி வரை உயரப் போவதாகவும், அதையும் தாண்டி 40 டிகிரி வரை வெப்பநிலை நிலவும் என்று கூறியுள்ளார். ஆனால் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் வெப்பநிலையில் சிறிது வீழ்ச்சி இருக்கும். அதன் பின் மீண்டும் அதிக வெப்பநிலை முழுவதும் தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.