மராட்டிய மாநிலத்தில் ஏடிஎம் மையத்தில் உதவுவது போல நடித்து டெபிட்/ கிரெடிட் கார்டுகளை திருடிய திருடர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
மராட்டிய மாநிலம் பால்கரில் ஏடிஎம் மையங்களில் வங்கி வாடிக்கையாளர்களுக்கு உதவுவது போல் நடித்து சிலர் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை திருடி வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. இதனையடுத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் தானேவைச் சேர்ந்த பர்வேஸ் அஷ்ரப் அலி ஷேக் மற்றும் சங்கர் ரங்நாத் சுரதகர் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து ஒரு கார் இரண்டு மொபைல் போன்களை பறிமுதல் செய்ததாக குற்றப் பிரிவின் காவல் ஆய்வாளர் பிரமோத் பகத் கூறியுள்ளார் .தொடர்ந்து விசாரணையில் அவர்கள் மாநிலத்தின் பல பகுதிகளில் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.