சீனாவில் இயங்கும் நிறுவனம் தயாரித்த ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்து விட்டது. இதனையடுத்து இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில் சீனாவின் தியான்ஜின் பகுதியில் இயங்கும் நிறுவனம் தயாரித்த ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அதனால் அங்கு பணியாற்றிய 1662 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து 1812 ஐஸ்கிரீம் பாக்ஸ்கள் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், அதனை சாப்பிட்ட அவர்களை சீன அரசு தீவிரமாக தேடி வருகிறது. அது மட்டுமன்றி அந்த ஐஸ் கிரீம்கள் வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டிருந்தால் அங்கு அந்த ஐஸ் க்ரீமை சாப்பிடுபவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.