சென்னையில் இருந்து 310 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை நோக்கி வருகிறது என்றும், இது நாளை அதிகாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதி இடையே நாளை கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் சென்னையில் நேற்று முதலே மழை வெளுத்து வாங்குகிறது. காற்றும் பலமாக வீசி வருகிறது. இந்த நிலையில் சென்னை மெரினாவில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு காவல்துறை தடை விதித்துள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. எனவே மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.