Categories
தேசிய செய்திகள்

மக்களே எச்சரிக்கை! கொரோனாவுக்கு மருந்து தருவதாக கூறி…. மோசடி செய்யும் கும்பல்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி தமிழகத்தில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு மக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்பட்டுள்ளன.

தடுப்பூசிகளை போடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஆன்லைனில் யாராவது கொரோனா  சிகிச்சைக்கு மருந்து தேடினால் அவர்களை தொடர்புகொண்டு தங்களிடம் மருந்து இருப்பதாக கூறி ஒரு கும்பல் கொள்ளையடித்து வருகிறது. இந்த மோசடியில் ரூபாய் 8000 தொடங்கி ஏன்? ரூ.75,000  வரை மோசடி நடந்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த சம்பவம் நடைபெற்று வருவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |