சீனாவில் தற்போது வேகமெடுத்து வரும் மாறுபட்ட கொரோனாவின் காரணமாக பல நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்றானது சீனாவின் ஊகான் நகரில் தான் உருவானது என்றும், அங்குதான் முதன்முதலில் கொரோனா நோயாளி ஒருவர் கண்டறியப்பட்டுள்ளார் என்று ஆராய்ச்சியானது, 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து கொண்டிருக்கின்றது. தற்போது தொடர்ந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவின் கொரோனா பரவல் வேகமாக பரவ தொடங்கியுள்ளது.
இதையடுத்து அங்கு பல நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் சீனாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களின் சேவைகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. அதிலும் குறிப்பாக ஜிலின் மாகாணத்தில் வேகமாக பரவி வரும் ஒமைக்ரான் மாறுபாடு காரணமாக தற்போதைய தொற்று எண்ணிக்கையில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக ஜிலினில் பதிவாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜிலினில், அண்டை மகாணமான லியோனிங்கிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. எனவே இங்குள்ள ஷென்யாங் நகரம் கடும் பாதிப்பை சந்தித்து வருவதால்,நேற்று திடீரென அந்நகரில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சுமார் 90 லட்சம் மக்கள் வசிக்கும் தொழில் நகரமான ஷென்யாங் முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது. எனவே இதன் காரணமாக மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.