மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், கொரோனா தொற்று பரவல் அதிகம் உள்ள மாநில அரசுகளுக்கு , கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதன்படி தமிழகம், கேரளா, டெல்லி உட்பட நாடு முழுவதும், இதுவரையிலும் கொரோனா வைரஸ் தொற்றின் 3 அலைகளும் பரவி விட்டன.
இந்நிலையில் இம்மூன்று அலைகளில் இருந்தும், அனைத்து மாநில அரசுகளும் மீண்டு, வந்து விட்ட சூழலில், கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணிகளானது, நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு விட்டன. இதன்பிறகு, தற்போது சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக, தமிழகம், கேரளா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், கொரோனா பரவலானது, மீண்டும் வேகம் எடுத்து வருவது, மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.