சென்னையில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சில பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கமல்ஹாசனின் வீடு மற்றும் அலுவலகம் அமைந்துள்ள சென்னை ஆழ்வார்பேட்டை அருகிலும் திடீரென்று பெரிய மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது. மரம் விழுந்த இடத்தில் நடிகர் நிதின் சத்யா இருந்துள்ளார். இந்த விபத்தில் இருந்து நூல் இழையில் உயிர் தப்பியதாக அவர் தெரிவித்து உள்ளார்.
நிதின் சத்யா சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில், ”மரம் விழுந்த இடத்தில் இருந்து நூலிழையில் உயிர் தப்பினேன். எனவே மழை பெய்யும்போது சென்னை மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்.