Categories
உலக செய்திகள்

மக்களே எச்சரிக்கை….!! மீண்டும் கோரமுகத்தை காட்ட தொடங்கியுள்ள கொரோனா….!!!!

கொரோனா பரவலானது தற்போது ஆசிய நாடுகளில் வேகமாக அதிகரித்து வருகிறது.

உலக நாடுகளை கடந்த 2 ஆண்டுகளாக தனது கோர கரங்களால் இறுக்கிய கொரோனா இன்னமும் பிடியை தளர்த்தாமல் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி எனும் பேராயுதத்தினால் கொரோனாவை முழுவதும்  ஒழிக்க போராடி வந்தாலும், அந்த கொடிய வைரஸ் ஒவ்வொரு முறையும் உருமாற்றத்தை அடைந்து தனது ஆதிக்கத்தை விரிவுப்படுத்திக் கொண்டே வருகிறது.

அந்த வகையில் ஆசிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் தற்போது மீண்டும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. அதிலும் குறிப்பாக தென்கிழக்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில்  தொற்று பரவலானது அதிகரித்து வருகிறது. இதையடுத்து கொரோனாவின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவிலும், இந்த வைரஸ் தாக்குதலை  ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தி, உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த தென்கொரியா மற்றும் நியூசிலாந்திலும் சமீப வாரங்களாக தொற்று பரவலானது உச்சத்தை தொட்டு வருகிறது.

இதையடுத்து ஓராண்டுக்குப் பிறகு சீனாவில் நேற்று முந்தினம் நிலவரப்படி கொரோனா உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இதனால் அந்நாட்டு மக்களிடையே வைரஸின் தாக்குதல் குறித்த அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதேபோல் நேற்று ஒரே நாளில் தென்கொரியாவில் 3 லட்சத்து 81 ஆயிரத்து 454 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றும் 319 பேர் கொரோனா  தொற்றினால் பலியாகியுள்ளனர்.

இதனை தொடர்ந்து நியூசிலாந்தில் நேற்று முந்தினம் நிலவர படி ,18 ஆயிரத்து 514 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த நாட்டின் மொத்த பாதிப்பு 4 லட்சத்து 70 ஆயிரத்தை கடந்துள்ளது. இதே போல் தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவிலும், சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கிலும் கொரோனா பாதிப்பானது தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.

Categories

Tech |