பறவை காய்ச்சல் காரணமாக முட்டை மற்றும் கோழி இறைச்சியை அரை வேக்காட்டில் சாப்பிட்டால் ஆபத்து நேரிடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாடு முழுவதும் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்பே இன்னும் முடிவடையாத நிலையில், கேரளாவில் புதிதாக பறவை காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது. தற்போது வரை ஐந்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவியுள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் இருந்து வரும் இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பறவை காய்ச்சல் காரணமாக கோழி மற்றும் முட்டை விலை மிகவும் சரிந்துள்ளது. அதுமட்டுமன்றி கோழி மற்றும் முட்டை சாப்பிடலாமா என்று மக்களுக்கு மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
அவ்வாறு முட்டை சாப்பிடும் போது முட்டையை ஆப்பாயில், ஒன் சைடு ஆம்லெட் என அரை வேக்காட்டில் சாப்பிட்டால் கட்டாயம் ஆபத்து நேரும். அதனால் நன்கு வேக வைத்து சாப்பிடுவது நல்லது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். முட்டையை வேக வைத்த பிறகு மஞ்சள் கரு திடமாக இருக்க வேண்டும். அது தண்ணீர் போல உடைந்து ஒழுகினால் அந்த முட்டையை சாப்பிடுவதை தவிர்க்கவும். அதனைப் போலவே கோழி இறைச்சியை நன்கு வேக வைத்து சாப்பிடுவது நல்லது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.