புதிய வகை உருமாறிய கொரோன வைரஸ் பாதிப்பானது விமான நிலையத்தில் 2 பயணிகளிடம் கண்டறியப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள அறிக்கையில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு இரண்டு பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஓமைக்ரானின் பிஏ1 மற்றும் பிஏ2 பிரிவுகள் ஒன்றிணைந்து புதிய வகை வைரஸாக உருமாறியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்த பாதிப்பானது அந்நாட்டின் பென் குரியன் விமான நிலையத்தில் இரண்டு பயணிகளிடம் சோதனை செய்ததில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் மேலும் அவர்களின் மாதிரிகள் தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் இந்த மாறுபட்ட திரிபு இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி போன்ற லேசான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேல் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.