இந்தியாவில் உள்ள நடுத்தர மக்களின் நம்பகமான சேமிப்புகளில் பிக்சட் டெபாசிட் ஒன்றாக உள்ளது இதில் வட்டி, பாதுகாப்பு, வரிச் சலுகை மற்றும் குறைந்த கால முதலீடு இவற்றையெல்லாம் எதிர்பார்த்துதான் வாடிக்கையாளர்கள் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் கூட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை தேடிச்சென்று முதலீடு செய்கின்றனர். ஃபிக்சட் டெபாசிட் தொகைக்கான காலத்தை 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை நம் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம். அதாவது 1 மற்றும் 2 ஆண்டுகள் பிக்சட் டெபாசிட் திட்டத்தை தேர்வு செய்தால் அதில் அதிக வட்டி கொடுக்கும் வங்கிகளையும், அதனால் வட்டி விகிதத்தையும் தெரிந்துகொள்ளலாம். தற்போது எந்தெந்த வங்கியில் பிக்சட் டெபாசிட் போட்டால் அதிக லாபம் கிடைக்கிறது என்பதனை பார்ப்போம்.
- ஐடிஎஃப்சி வங்கி ஒரு வருட த்திற்கு குறைவான ஆண்டுக்கு ஃபிக்சட் டெபாசிட்டிற்கு 5.75 சதவீத வட்டி வழங்குகிறது.
- டிசிபி பேங்க் 5.5 சதவீத வட்டியை ஒருவருட ஃபிக்சட் டெபாசிட்டிற்கு வழங்குகிறது.
- ஆர்பிஎல் வங்கி ஓராண்டுக்கான ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு 6.25 சதவீத வட்டி வழங்குகிறது.
- பந்தன் பேங்க் ஓராண்டு ஃபிக்சட் டெபாசிட்டுளுக்கு 5.75 சதவீத வட்டியை வழங்குகிறது.
- இந்தஸ்இந்த் வங்கி ஒரு வருட ஃபிக்ஸட் டெபாசிட்டிற்கு வழங்கும் வட்டி விகிதம் 6 சதவீதம் ஆகும்.
- ஐடிஎஃப்சி வங்கி இரண்டு வருட ஃபிக்சட் டெபாசிட்டிற்கு 6.00 சதவீத வட்டி வழங்குகிறது.
- ஆர்பிஎல் வங்கி இரண்டு வருட ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு 6.5 சதவீத வட்டி வழங்குகிறது.
- பந்தன் பேங்க் 2 ஆண்டுக்கு குறைவான ஃபிக்சட் டெபாசிட்டுளுக்கு 5.25 சதவீத வட்டியை வழங்குகிறது.
- டிசிபி பேங்க் 6.50 சதவீத வட்டியை இரண்டு வருட ஃபிக்சட் டெபாசிட்டிற்கு வழங்குகிறது. மற்ற பல வங்கிகள் சற்று குறைவான வட்டியை கொடுக்கிறது.