Categories
மாநில செய்திகள்

மக்களே… எப்போ வேணாலும் வரும்… கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க…!!!

வேலூர் மாவட்டத்தில் பெண்ணை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவான புரெவி புயல் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன்பிறகே தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் திடீரென பின்வாங்கி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. வங்கக் கடலில் ராமேஸ்வரம் அருகே நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி உள்ளது.

இதனையடுத்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பொண்ணை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கரையோர மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கனமழை காரணமாக ஆந்திராவின் கல்வகுண்டா அணையில் இருந்து அதிக அளவு நீர் திறக்கப்படுவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |