Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மக்களே எப்போ வேணாலும் வரும் உஷாரா இருங்க…. வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!

தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த ஒரு மாதமாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மூன்றாம் தேதி தொடங்கியதால், பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனால் முக்கிய அணைகள் மற்றும் ஏரி குளங்கள் அனைத்தும் நிரம்புகின்றன.

இந்நிலையில் கோவை மாவட்டம், பில்லூர் அணையின் முழு கொள்ளளவான 100 அடியில் 97 அடிக்கு நீர் உயர்ந்துள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இதனால் மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆழம் கொம்பு, வச்சினம் பாளையம் உள்ளிட்ட பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |