பொதுமக்களின் முகக்கவசம் அணிய வேண்டாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மராட்டிய மாநிலத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதாவது கொரோனா பரவல் காரணமாக தொற்றுநோய் சட்டம் மற்றும் பேரிடர் சட்டம் அமலில் இருந்தது. இந்த சட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து ஏப்ரல் 2-ஆம் தேதி பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டாம் என்றும் கூறினார். மேலும் பயணிகளுக்கு கட்டாய தடுப்பூசி செலுத்துதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட சட்டங்கள் ரத்து செய்யப்படுகிறது.