Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மக்களே! “ஏப்ரல் 22-ம் தேதி வரை”….. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ராஜாக்கமங்கலம் அருகே கண்டபற்றிவிளை பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு சுகாதாரத் திருவிழா மற்றும் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் மற்றும் விஜய் வசந்த் எம்.பி தொடங்கி வைத்தனர். அதன்பிறகு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அனைத்து ஊராட்சிகளிலும் சுகாதாரத் திருவிழா மற்றும் மருத்துவ முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாம் ஏப்ரல் 18 முதல் 22-ம் தேதி வரை நடைபெறும். இந்த மருத்துவ முகாம் கண்டபற்றிவிளை‌ மற்றும் இரணியல் பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்து முடிந்துள்ளது.

இதைத்தொடர்ந்து 19-ஆம் தேதி குமாரபுரம், தோப்பூர், மருங்கூர் பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், பெருமாள்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறும். அதன்பிறகு 20-ம் தேதி திருவட்டார் அருணாச்சலம் அரசு மேல் நிலைப்பள்ளியிலும், கட்டமலைக்குன்று எல்.எம். எஸ் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறும். இதனையடுத்து 21-ம் தேதி கருங்கல் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் முன்சிறை அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 22-ம் தேதி மேல்பாலை புனித மேரி மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறும். இந்த மருத்துவ முகாமில் மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை வழங்கப்படும். எனவே இந்த முகாமில் அனைத்து மக்களும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

Categories

Tech |