Categories
மாநில செய்திகள்

மக்களே!…. ஒரே ஒரு கிளிக்…. அவ்வளவு தான்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!!!

சென்னை மாநகராட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் சென்னை மாநகராட்சி மண்டலம் 1 முதல் 15 வரை தினசரி சராசரியாக சுமார் 5100 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரமாகிறது. ஒவ்வொரு நாளும் சேகரமாகின்ற குப்பையை அகற்றுவதற்காக 358 கனரக இலகுரக காம்பாக்டர், டிப்பர் வாகனங்கள் மற்றும் 3725 பேட்டரி வாயிலாக இயங்கக்கூடிய 3 சக்கர வாகனங்கள் அன்றாடம் தூய்மைப் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியிலுள்ள 15 மண்டலங்களில் தண்டையார் பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர் மற்றும் அண்ணாநகர் போன்ற 5 மண்டலங்களில் மாநகராட்சியின் சார்பாக நேரடியாக தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த 5 மண்டலங்களில் வீடுகள் தோறும் குப்பை சேகரிக்க பயன்படுத்தப்படும் பேட்டரியால் இயங்கும் வாகனங்களின் நிலையை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் அடிப்படையில் மண்டலம், வார்டு, வாகனத்தின் ஐடி எண், அதன் டிரிப் எண், நேரம் மற்றும் துப்புரவு பணி மேற்கொள்ளப்படும் தெருக்களின் பெயர்கள் அடங்கிய விபரங்கள் சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே சென்னை மாநகராட்சியின் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர் மற்றும் அண்ணாநகர் போன்ற 5 மண்டலங்களுக்கு உட்பட்ட பொதுமக்கள் தங்களது தெருக்களில் வீடுகள்தோறும் குப்பை சேகரிக்கும் வாகனங்கள் மற்றும் அதன் நேரம் தொடர்பான விபரங்களை மாநகராட்சியின் <https://chennaicorporation.gov.in/gcc/bov_route/>  எனும் இணையதள இணைப்பில் அறிந்துகொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |