Categories
மாநில செய்திகள்

மக்களே…. கன்னியாகுமரியில் இனிமேல் இது இருக்காது… மாஸ் காட்டும் எஸ்.பி…!!!!!

குமரிமாவட்டத்தில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி முடிவடைந்த பின் குற்ற சம்பவங்கள் குறையும் என குமரி மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஆயுதப்படை வளாகத்தில் ரூபாய் 9.71 லட்சத்தில் அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனை இன்று கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் திறந்து வைத்துள்ளார்.கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறியபோது, அதிநவீன சிசிடிவி கேமராக்கள் மூலம் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் எண் , நம்பர் பிளேட் தெளிவாக தெரிவதால் குற்றவாளிகளை உடனே கைது செய்ய உதவுவதாகவும், சிசிடிவி கேமரா பொருத்தும் பணி முடிவடைந்த பின் வரும் ஏப்ரல் மாதம் முதல் மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் குறையும் எனவும் கூறியுள்ளார்.

இதன் மூலமாக தொடர் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு குண்டர் சட்டம் பாயும். மேலும் அதேபோன்று குமரி மாவட்டத்தில் “கஞ்சா விற்பனையோ, பயன்பாடோ  இருக்கவே கூடாது என பணியாற்றி வருகிறேன்” என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |