Categories
மாநில செய்திகள்

மக்களே கவனமா இருங்க… இப்போ தான் ஆரம்பம்… உடனே போங்க…!!!

தமிழகத்தில் கன மழை பெய்து கொண்டிருப்பதால் டெங்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று முன்தினம் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.தற்போது புயல் மேலும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ராமநாதபுரம் கடற்கரை அருகே நிலை கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. மழை காரணமாக வீடுகளில் கொசுக்கள் அதிகம் வர வாய்ப்பு உள்ளது. அதனால் டெங்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மக்கள் நல்ல தண்ணீர் தேங்காமல் சுத்தமாக வைத்து இருந்தால் டெங்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் பழைய குப்பைகளை உடனே அகற்றவும், சுற்றுப்புறங்களை தூய்மையாக வைக்கவும் அறிவுறுத்தியுள்ளனர். காய்ச்சல், சளி, இருமல் மற்றும் தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்ய அறிவுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |