Categories
மாநில செய்திகள்

மக்களே…! கவனமா இருங்க…. தண்ணீரை காய்ச்சி குடிங்க…. தமிழிசை அட்வைஸ்…!!!

தமிழகத்தில் சில நாட்களாகவே தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. அடுத்த சில நாட்களுக்கும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டிருப்பதாகவும், அது வலுப்பெற்று தமிழக கடலோரத்தை நோக்கி நகரும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் மக்களிடையே பெரும் அச்சமும், பீதியும் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

முதல்வரும் பாதிக்கப்பட்ட இடஙக்ளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார். இந்த நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் டுவீட் ஒன்று போட்டுள்ளார். அதில், தமிழகத்தில் கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது பெரும் வேதனை அளிக்கிறது. மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மழை காலங்களில் நோய்த் தொற்று பரவ வாய்ப்பு இருப்பதால் நீரைக் காய்ச்சிக் குடிக்க வேண்டும். மின்சாதனங்களை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

 

Categories

Tech |