Categories
தேசிய செய்திகள்

மக்களே கவனம்.. “ஆதாரில் இதை ஒரு முறை மட்டுமே புதுப்பிக்க முடியும்”…. முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் ஆதார் அட்டை அனைத்து பயன்பாடுகளுக்கும் இன்றியமையாததாக இருக்கின்றது. இதனை அடுத்து அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் கார்டு மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதனால் இதில் இடம்பெற்றிருக்கும் விவரங்கள் அனைத்தும் சரியானதாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். அதன்படி ஆதாரில் தங்களின் பெயர், முகவரி, பிறந்த தேதி அல்லது பாலினம் வயது மொபைல் எண் முகவரி போன்றவை சரியானதாக இருக்க வேண்டும். மேலும் மற்ற ஆவணங்களில் உள்ள தரவுகளும் ஆதாரில் உள்ள விவரங்களும் மாற்றமில்லாமல் இருக்க வேண்டும். தற்போது எந்தெந்த தகவல்களை எத்தனை முறை திருத்திக் கொள்ளலாம் என்பதையும் திருத்துவதற்கான வழிமுறைகளையும் காண்போம்.

மொபைல் எண்

  • உங்களின் மொபைல் எண்ணை புதுப்பிக்க ஆதார் சேவா கேந்திரா (ASK) அல்லது ஆதார் பதிவு புதுப்பிப்பு மையத்திற்குச் சென்று ஒரு முறை மட்டுமே திருத்தங்களை மேற்கொள்ள முடியும்.
  • மேலும் மொபைல் எண்ணை ஆன்லைன் முறையில் புதுப்பிக்க இயலாது.

பெயர்

  • ஆதாரில் உங்களின் பெயர் மற்ற ஆவணங்களின் பெயருடன் வேறுபடுகிறது எனில் இதனை கட்டாயமாக திருத்த வேண்டும்.
  • மேலும் உங்களின் பெயரை 2 முறை மட்டுமே புதுப்பிக்க முடியும்.

பிறந்த தேதி

  • உங்கள் ஆதாரில் பிறந்த தேதியை (DOB) ஒரு முறை மட்டுமே புதுப்பிக்க இயலும்.
  • உங்களின் பெயரை 2வது முறை புதுப்பிக்க வேண்டுமெனில் ஒப்புதலுக்காக UIDAI இன் சம்பந்தப்பட்ட பிராந்திய அலுவலகத்தை அணுக வேண்டும்.

பாலினம்

  • ஆதாரில் உங்களின் பாலினத்தையும் ஒரு முறை மட்டுமே புதுப்பிக்க முடியும்.
  • மேலும் இரண்டாவது முறை உங்களின் பாலினத்தை புதுப்பிக்க நினைத்தால் ஆதார் மையத்தில் கோரிக்கையைப் புதுப்பித்து, விதிவிலக்கின் கீழ் UIDAI இன் சம்பந்தப்பட்ட பிராந்திய அலுவலகத்திற்கு சென்று புதுப்பிக்க ஒப்புதல் பெற வேண்டும்.

 

Categories

Tech |