Categories
தேசிய செய்திகள்

மக்களே கவனம் : சூப்பர் தக்கல் ப்ரோ…. டிக்கெட் முன்பதிவு மூலம்…. லட்ச கணக்கில் மோசடி…!!

முன்பெல்லாம் ரயிலில்  பயணம் மேற்கொள்ள டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் எனில் ரயில்வே நிலையத்திற்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட்டை வாங்கி வருவோம். ஆனால் தற்போது உட்கார்ந்த இடத்தில் மொபைலில் சில செயலிகள் மூலமாக டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளும் வசதி வந்துவிட்டது. இது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் பட்சத்தில், இதுபோன்ற வசதிகளை தருவதாக கூறி பல செயலிகள் தொடர்ந்து மோசடி செய்தும் வருகின்றனர். அந்த வகையில்,

தக்கல் அல்லது சூப்பர் தக்கல்  ப்ரோ என்னும் செயலி மூலம் ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்வதாக யுவராஜ் என்பவர் லட்சக்கணக்கில் பண மோசடி செய்துள்ளார். அதாவது ஐ ஆர் சி டி சி யில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால்  யுவராஜின் சொந்த வங்கிக் கணக்கிற்கு பணம் செல்லும் வகையில் அவர் வடிவமைத்துள்ளார். இந்நிலையில் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட யுவராஜ்  மீது ரயில்வே சட்டப்பிரிவு 143(2)இன்   கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Categories

Tech |