Categories
தேசிய செய்திகள்

மக்களே கவனம்…! வேகமெடுக்கும் ஜிகா வைரஸ்…. கடும் எச்சரிக்கை…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பே இன்னும் குறையாத சூழலில், ஜிகா வைரஸ் பாதிப்பு மக்களை மிரட்டி வருகிறது. கான்பூர் மாவட்டத்தில் நேற்று மட்டும்  புதிதாக 13 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் அந்த மாவட்டத்தில் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் இந்த வைரஸ் பாதிப்பினால் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை.

ஜிக வைரஸ் பரப்பும் கொசு காலை நேரத்தில் கடிக்க கூடியது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் ஜிகா வைரஸ் அதிகமாக பரவி வருவதால் டெல்லியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக அம்மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். மேலும் உத்தரப் பிரதேசத்திலும் ஜிகா வைரஸ் தொடர்பான கண்காணிப்பு, மாதிரி சோதனைகளைத் தீவிரப்படுத்துமாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |