Categories
தேசிய செய்திகள்

மக்களே கவலைப்படாதீங்க…. போக்குவரத்து நெரிசல் விரைவில் குறைக்கப்படும்…. சிறப்பு கமிஷனர் வெளியிட்ட அறிக்கை….!!!!

பெங்களூரு    போக்குவரத்து சிறப்பு கமிஷனர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார்.

பெங்களூரு போக்குவரத்து சிறப்பு கமிஷனர் சலீம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது பெங்களூருவில் சில ஆண்டுகளாகவே போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. ஆனால் இந்த பிரச்சனை குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இங்கு ஒரு கோடிக்கும் அதிகமான வாகனங்கள் உள்ளது. அவற்றை கட்டுப்படுத்துவதற்கு 44 போக்குவரத்து போலீஸ் நிலையங்கள் உள்ளது. ஆனால் அங்கு போலீசாருக்கு எந்தவித பற்றாக்குறையும் இல்லை. ஆனாலும் தற்போது கமிஷனருக்கு பதிலாக போக்குவரத்து சிறப்பு கமிஷனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நியமிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்கு தீர்வு காண்பது. மேலும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பான சாலை பயணத்தை மேற்கொள்வதற்கு முக்கியத்துவம் கொடுப்பதாகும்.

இந்நிலையில் போக்குவரத்து பிரச்சனையை தீர்ப்பது  குறித்து தலைமைச் செயலாளர், போலீஸ் கமிஷனர், உயர் போலீஸ் அதிகாரிகளுடன் உயர் மட்ட கூட்டம் நடத்தப்படும். அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவரின் கருத்துகளையும் கேட்டு முடிவு எடுக்கப்படும். மேலும் போக்குவரத்து நெரிசல் பிரச்சனையை சரி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். இந்நிலையில் டோயிங் முறையை மீண்டும் கொண்டு வருவது பற்றி எந்த திட்டமும் இல்லை.மேலும் போலீசார் அபராதம் விதிக்க மட்டுமே பணியில்  இல்லை போலீசார் மீது மக்களுக்கு நம்பிக்கை வர வேண்டும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |