இந்தியாவில் கடந்த ஆண்டுக்கு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்த வைரஸ் இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை ஜனவரி இறுதிக்குள் உச்சத்தை தொட்டு மார்ச் மாதத்தில் அடங்கிவிடும் என்று கான்பூர் பேராசிரியர் மணீந்திர அகர்வால் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியது, ஜனவரி இறுதியில் மூன்றாவது அலை உச்சத்தை தொட வாய்ப்புள்ளது. அதன்பிறகு மார்ச் மாதம் வைரஸ் பாதிப்பு முற்றிலும் குறைந்து போய்விடும்.
அதைத்தொடர்ந்து முதல் 2 அலைகளை போல இல்லாமல், மூன்றாவது அலை வேகமாக பரவி வருவதால் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரிக்க கூடும். இது ஜனவரியில் படிப்படியாக குறையத் தொடங்கி மார்ச் மாதத்தில் முற்றிலும் அடங்கிவிடும். இதனைத் தொடர்ந்து டெல்லியில் தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை 22,000 வரை உள்ளது. இது உச்சத்தில் 40,000 என்ற அளவில் இருக்கும். டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் இந்த மாத இறுதியில் அதிக அளவிலான பாதிப்புகள் அதிகரித்து இந்த மாதத்துடன் ஒமைக்ரான் வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துவிடும். மேலும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள், பேரணிகள் மூலம் மட்டுமே ஒமைக்ரான் பரவும் என்று கூற முடியாது. வேறு பல காரணிகளும் கூட முக்கிய காரணமாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.